Published on 22/04/2023 | Edited on 22/04/2023
தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் 2023-2024 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று நேற்று முடிவடைந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவது குறித்தும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமைச்சர்கள் வெளிநாடு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.