Skip to main content

பிக்பாஸ் வீட்டில் தற்கொலை முயற்சி.... மதுமிதா வெளியேற்றம்!

Published on 17/08/2019 | Edited on 18/08/2019

 


பிக் பாஸ் வீட்டில் நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.  இதனால் அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.  சிகிச்சைப்பின்னர் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.  விதிகளை மீறிவிட்டதாக கூறி  பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டார்.

 

b

 

நடிகர் கவின், சாக்‌ஷி - அபிராமி - லாஸ்லியா - ஷெரின் ஆகிய 4 பேரையும் லவ் பண்ணுவதாக தெரிவித்தார்.  இது ஜாலியாக தான் சொன்னதாக கவின் சொன்னாலும், சாக்‌ஷியும், அபிராமியும் மனதளவில் அதிகம் பாதிக்கப்பட்டதாக கூறி,  இந்த விவகாரத்தை பெரிய பிரச்சனையாக கொண்டு சென்றார் மதுமிதா.     இதனால், பிக்பாஸ் வீட்டில் பல போட்டியாளார்களினால் ஒதுக்கப்படும் நிலைக்கு வந்துள்ள கட்டத்தில், நேற்று இரவு மணிக்கட்டை வெட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சிகிச்சைப்பின்னர் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை.  விதிகளை மீறிவிட்டதாக கூறி  பிக்பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேற்றப்பட்டுள்ளார்.

 

இது குறித்து இன்றைய நிகழ்ச்சியில், மதுமிதாவின் இந்த முடிவு தவறான முன்னுதாரணம்.  மது செய்தது தப்பான விஷயம் என்று கமல்ஹாசனிடம் வருத்தம் தெரிவித்தார் இயக்குநர் சேரன்.

 

ம்

 

மதுமிதாவின் செயல் குறித்து கமல்ஹாசனும், ’’இந்த நிகழ்ச்சியை சிறுவர்களும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.    மேலும், உங்களுக்கு என்று ஒரு குடும்பம் இருக்கிறது.  அப்படி இருக்கும்போது  இப்படி ஒரு முடிவை எடுப்பதற்கு எப்படி மனசு வந்தது? ’’என்று கேட்டதும்,  ‘’என்னை ஒதுக்கி வைத்து மற்றவர்கள் பேசுவதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.   அந்த நேரத்தில் என்னால் குடும்பத்தை நினைத்து பார்க்க முடியவில்லை’’என்று கூறினார்.

 

’’நீங்கள்தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள்.   வெற்றி பெறுவீர்கள் என்று பலரைப்போல நானும் நம்பிக்கொண்டிருக்கிறேன்.  அப்படி இருக்கும்போது இப்படி நடந்துகொள்ளலாமா? எதிர்ப்புகளை சமாளிப்பதுதானே புத்திசாலித்தனம்?’’ என்று கமல் கேட்க,  ’’தலைவர்கள் எல்லாம் தியாகம் செய்ய வேண்டும்.  நான் தியாக செய்யத்துணிந்தேன்’’ என்றார் மதுமிதா.

 

’’உங்களுடைய தியாகம் அஹிம்சை கலந்ததாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும். இதற்கு மேல் பேசினால் நான் வாக்குவாதம் செய்ததாக ஆகிவிடும். அது வேண்டாம்’’  என்று முடித்துக்கொண்டார் கமல்ஹாசன்.

 

அரங்கை விட்டு மதுமிதா வெளியேறியபின்னர்,  ’’வீட்டிற்கு சென்றதும்  தான் செய்தது தவறு என்பதை மதுமிதா புரிந்துகொள்வார்’’ என்று பார்வையாளர்களைப் பார்த்து கூறினார் கமல்ஹாசன்.

 

 

சார்ந்த செய்திகள்