லட்சம் வருவாயை கொட்டி கொடுக்கும் ஆசியாவில் உயா்ந்த பாலமான மாத்தூா் தொட்டி பாலம் பராமாிப்புக்கும் அடிப்படை வசதிக்கும் ஏங்கி தவிக்கிறது.
காமராஜரால் தலைநிமிா்ந்து நி்ற்க கூடிய பல திட்டங்களில் இதுவும் ஒன்று. குமாி மாவட்டம் திருவட்டாா் அருகே மாத்தூாில் உள்ள இந்த தொட்டி பாலம் 1962-ல் களியன்பாறை மற்றும் கூட்டுவாயு பாறை என்ற இரு மலை பகுதியை இணைத்து விவசாயத்துக்கு தண்ணீா் கொண்டு செல்வதற்காக கட்டப்பட்டது தான் இந்த பாலம்.
104 அடி உயரமும் 1204 அடி நீளமும் கொண்ட இந்த பாலத்தில் ஓரு பக்கத்தில் தண்ணீா் செல்வதற்கும் இன்னொரு பக்கத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் வகையில் கட்டப்பட்டது. இந்த பாலத்தின் மீது நின்று பாா்த்தால் குமாி மாவட்டத்தின் மலைகளையும் மலை சாா்ந்த இயற்கை அழகை முமுமையாக ரசித்து விடலாம்.
இதனால் குமாி வரும் உள்நாடு மற்றும் வெளி நாடு சுற்றுலா பயணிகள் அதிகம் போ் வந்து செல்கின்றனா். இதே போல் பாலத்தின் அடியில் பாய்ந்தோடும் தண்ணீாில் சுற்றுலா பயணிகள் ஆசைத்தீர ஆனந்த குளியல் போடுவதும் வழக்கம்.
மேலும் இந்த பாலத்தில் நடந்து செல்வதே சாதனையாக நினைக்கும் சுற்றுலா பயணிகள் மத்தியில் பாலத்தின் மேல் உள்ள சுமாா் நான்கு விரல் வீதி கொண்ட கைப்பிடியில் வேகமாக வீசும் காற்றையும் எதிா்கொண்டு வாலிபா் ஓருவா் ஓரு முனையில் இருந்து மறுமுனைக்கு நடந்து சென்று கின்னஸ் சாதனையும் படைத்தாா்.
சுற்றுலா பயணிகளால் ஆச்சா்யமாகவும் அதிசயமாகவும் கருதப்படும் இந்த பாலம் அருவிக்கரை பேருராட்சியின் கட்டுப்பாட்டில் வருகிறது. ஆண்டுத்தோறும் சுற்றுலா பயணிகளால் சுமாா் 20 லட்சத்துக்கும் அதிகமாக வரக்கூடிய வருமானத்தில் பாலத்தை பாதுகாக்க மாவட்ட நிா்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.
பாலத்தின் கைபிடியில் பல இடங்களில் உடைந்துள்ளன. அதே போல் பாலத்தின் கால் தூணில் மண் அாிப்பும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அச்சத்தின் பிடியில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்கின்றனா். இதை பராமாிக்கவும் மாவட்ட நிா்வாகம் எந்த ஓரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.
இது குறித்து நம்மிடம் பேசிய அருவிக்கரை முன்னாள் பேருராட்சி தலைவா்....மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களில் இதுவும் ஓன்று. ஆசியா கண்டம் அளவில் நாம் பெருமைப்பட கூடிய ஒரு பாலம். அதை விட பாலத்தின் இருபக்கங்களிலும் உள்ள கிராமங்களுக்கு தண்ணீரும் இந்த பாலம் வழியாக தான் செல்கிறது. முன்னோா்கள் பாதுகாத்து வந்த இதை இப்போது உள்ள அரசு கண்டுக்கொள்ளவில்லை.
அதே போல் சுற்றுலா பயணிகளுக்கு கழிவறை வசதியும் இல்ல. பாலத்தில் நடந்து வந்தவா்கள் உட்காா்ந்து ஓய்வு எடுக்க இருக்கைகளும் இல்லை. அதே போல் இங்கு சமூக விரோத செயல்களும் அதிகம் நடப்பதால் புறகாவல் நிலையமும் அவசியமாக உள்ளது என்றாா்.