சென்னை மாதவரம் ரவுண்டான அருகில் உள்ள ஒரு ரசாயன கிடங்கில் பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பெரும் தீவிபத்து தொடர்பாக மாதவரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தற்போது தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மருந்து தயாரிக்க தேவையான மூலப்பொருள்கள் வைக்கப்படும் இந்த ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தால் அந்த கிடங்கின் அருகில் இருந்த சுமார் 10க்கும் மேற்பட்ட கடைகளில் தீ பரவியுள்ளது. அந்த பகுதிக்கு மக்கள் வரவேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் கண்ணெரிச்சல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவ இடத்தில் செய்தியாளர்களை சந்தித்த தீயணைப்புதுறை டிஐஜி சைலேந்திரபாபு தெரிவித்ததாவது,
இந்த தீ அருகில் உள்ள கிடங்கு மற்றும் கடைகளுக்கு பரவாத வண்ணம், மக்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படாத வன்ணம் கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். வேதியல் பொருளை அணைப்பதற்கான நுரை இருக்கிறது அதை கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். உள்ளே உள்ள வேதியல் ரசாயனம் மருந்து தயாரிப்பதற்கான ரசாயனம் எனவே அதில் விஷத்தன்மை இல்லை எனவே பொதுமக்கள் பயம்கொள்ளவேண்டாம். தற்பொழுவரை 26 தீயணைப்பு வாகனங்கள் வந்துள்ளது. நுரை கொண்டு தீயணைக்கும் வாகனங்கள் 6 உள்ளது. மேலும் 10 வாகனங்கள் வந்துகொண்டிருக்கிறது. 500 தீயணைப்பு வீரர்கள் தற்பொழுது பணியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த ஷிப்ட்க்கு 500 வீரர்கள் வந்துள்ளனர். பொதுமக்கள் யாரும் பயம்கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார்.