Skip to main content

முகக்கவசம் அணிந்து மது விற்பனை செய்யும் டாஸ்மாக் ஊழியர்கள் (படங்கள்)

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

 

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு முகக்கவசம் (mask) மற்றும் கை சுத்திகரிப்பான் (hand sanitizer) வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட மேலார்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மாவட்ட மேலாளர்களும் மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும், மதுக்கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்களை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக நிர்வகித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

சென்னையில் எழும்பூர் ஆல்பர்ட் திரையரங்கம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் மதுபான விற்பனையில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் முகக்கவசம் அணிந்து விற்பனையில் ஈடுபட்டனர். அதன் அருகே உள்ள பார் எனப்படும் மதுக்கூடமும் சுத்தம் செய்யப்பட்டு அரசு உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்