விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பது வழக்கம். மலைப்பகுதியில் உள்ள கோவில் என்பதால் ஓடைகளில் அவ்வப்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதன் காரணமாக மாவட்ட நிர்வாகம் பேரிடரை கருத்தில் கொண்டு மலைக்கு மேல் செல்ல தடை மற்றும் கட்டுப்பாடுகளை அவ்வப்போது விதிக்கும்.
இந்த நிலையில், மாசி மாத பிரதோஷத்தை ஒட்டி மலையில் உள்ள கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இருப்பினும் 12 மணி வரை மட்டுமே அனுமதி என்பதால் குறிப்பிட்ட நேரத்தில் வழிபாட்டை முடிப்பதற்காக அதிகப்படியான பக்தர்கள் மலையேறி வருகின்றனர். ஏழாம் தேதி வரை காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி அளித்துள்ளது. ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்ததால் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படும் எனவும் வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.