திருப்பத்தூர் அடுத்த பாண்டியன் பாலிடெக்னிக் விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் (90) என்கிற மூதாட்டி கடந்த 10 ஆம் தேதி 9.30 மணிக்கு தூங்கச் சென்றுள்ளார். காலை 6.00 மணிக்கு அவர்களது உறவினர்கள் பார்த்த போது முகத்தில் காயம் ஏற்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த அரை சவரன் கம்மல், மூக்குத்தி, அரை சவரன் கொப்புகாது கம்மல், மாட்டல் அரை சவரன், கால் சவரன் தாலி, 20 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை மாயம் ஆகி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டி கழுதை நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் இருக்கலாம் என விசாரணையைச் செய்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். மேலும் திருவண்ணாமலையிலிருந்து சம்பவ இடத்தில் மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டு விசாரணையை தீவிரப்படுத்தினர். பின்னர் எஸ்பி தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு மூதாட்டியைக் கொலை செய்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களும் ஆய்வு செய்து 30க்கும் மேற்பட்டோரின் கைரேகைகளைப் பதிவு விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
பின்னர் தனிப்படை போலீசார் விசாரணையில் மது அருந்த பணம் இல்லாததால் நள்ளிரவில் மூதாட்டியின் வீட்டிற்குச் சென்று வீட்டிலிருந்த பல்பை கழட்டி மூதாட்டி உறங்கிக் கொண்டிருந்தபோது போர்வையை போர்த்தி கொலை செய்தது புலிக்குட்டை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் கோவிந்தராஜ்(39) என்பது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து திருடிய நகையை திருப்பத்தூரில் உள்ள ஒரு நகை கடையில் 22 ஆயிரம் ரூபாய்க்கு அடகு வைத்து. தினமும் குடித்து விட்டு சந்தோசமாக இருந்துள்ளார். இதையடுத்து மூதாட்டியை கொலை செய்த கோவிந்தராஜயை கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். மது அருந்தப் பணம் இல்லாததால் மூதாட்டியைக் கொலை செய்த சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.