திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு TH45 M 3718 என்ற எண்ணுடன் ‘வேகன் ஆர்’ கார் நின்றுகொண்டிருந்தது. அந்தக் காரில் பிரஸ் (press) என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, செக்யூரிட்டி புரொடக்சன் ஏஜென்சி என்ற சக்கரம் ஒட்டப்பட்டு, காரின் மேல் பகுதியில் சைரன் வைக்கப்பட்டிருந்தது.
இந்தக் கார் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டோன்மென்ட் காவல்துறையினர் காரின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களை சரிபார்த்தனர். அவர் கொடுத்த தகவல்கள் அனைத்தும் முன்னுக்குப் பின்னாக இருந்த நிலையில், காவல்துறையினர் அவருடைய வாகனத்தைப் பறிமுதல் செய்தனர்.
முதலில் காவல்துறை விசாரித்தபோது தன்னுடைய உறவினர் ராணுவத்தில் பணியாற்றுகிறார் என்று கூறிய அவர், பின்னர் அவர் ஓய்வுபெற்றுவிட்டார் என்று கூறினார். அவர் சைரன் வைத்துக்கொள்வதற்கு அலுவலகத்திலிருந்து அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறையின் விசாரணையில் முன்னுக்குப் பின்னான பதில்கள் வந்ததால் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், அவருடைய வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த சைரனை காவல்துறையினர் அகற்றி பறிமுதல் செய்ததோடு காரையும் பறிமுதல் செய்து கண்டோன்மென்ட் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.