Skip to main content

பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும்: ஜெயக்குமார்

Published on 28/08/2017 | Edited on 28/08/2017
பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும்: ஜெயக்குமார்

அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறியதாவது, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையையும், ஜெயா தொலைக்காட்சியையும் விரைவில் மீட்போம். அது தொடர்பான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இன்று முத்தான, சத்தான 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. டி.டி.வி.தினகரனால் நியமிக்கப்பட்ட நியமனங்களும் கட்சி பதவி தொடர்பான நீக்க அறிவிப்புகளும் செல்லாது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகளே கட்சியை வழி நடத்துகிறார்கள்.

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் சசிகலா நீக்கம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும். இன்றைய கூட்டத்தில் பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்