திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 1ந்தேதி அண்ணாமலையார் கோயிலுக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றம் நடைபெற்ற இன்று, திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் அண்ணாமலையார் கோயிலுக்குள் வந்து அண்ணாமலையாருக்காக மாலை அணிந்துக்கொண்டனர்.
தீபத்திருவிழா நடைபெறும் இந்த 14 நாட்களில் மகா தீபத்தன்று கிரிவலம் அல்லது மலையேறி அண்ணாமலையாரை பக்தியோடு தரிசிக்க வேண்டும் என்பதற்காக மாலை அணிந்துக்கொண்டதாக கூறுகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் மட்டுமே இப்படி மாலை அணிந்து கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்துக்கொண்டதை பார்க்க முடிந்தது. இந்த ஆண்டு ஆயிரக்கணக்கானவர்கள் மாலை அணிந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது. மகாதீபத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் கோயிலுக்குள் அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகின்றன என்பது குறிப்பிடதக்கது.