தேனி மாவட்டத்தில் உள்ள போடி, தேவாரம், கோம்பை, பண்ணப்புரம், பாளையம் உள்பட சில பகுதிகளில் கடந்த ஏழு ஆண்டுகளாகவே அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து இறங்கி வந்த மக்னா யானை அப்பகுதிகளில் இருக்க கூடிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து வாழை, கரும்பு உள்பட விவசாய பொருட்களை அழித்து சேதப்படுத்தி வருகிறது.
இதனால் மனம் நொந்து போன விவசாயிகள் அந்த மக்னா யானையை பல முறை விரட்டி அடித்தும் வந்தனர். அப்படி இருந்தும் தனியாக தோட்டம், காடுகளுக்கு போன விவசாயிகள் ஏழு பேரை இந்த மக்னா யானை விரட்டி விரட்டி கொன்னு இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வனத்துறையிடமும் புகார் கொடுத்ததின் பேரில் வனத்துறை அதிகாரிகள் மற்றும் அப்பகுதி மக்களும் இணைந்து அந்த மக்னா யானையை பல முறை விரட்டியும் கூட மீண்டும் விலை நிலங்களுக்குள் புகுந்து விவசாயத்தை அழித்து வந்தது.
இதனால் மனம் நொந்து போன விவசாயிகள் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவிடம் புகார் மனு கொடுத்து அந்த மக்னா யானையை பிடிக்க வலியுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் தான் வனச்சரகர் நவீனும் கோழிக்க முத்தி யானைகள் முகாமில் இருந்து கலீம் என்ற கும்கி யானையை லாரியில் ஏற்றி தேவாரத்திற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள் அதோடு பத்து யானை பாகன்களும் வந்து இருக்கிறார்கள்.
இப்படி மக்னா யானையை பிடிக்க இன்று முதல் இந்த கும்கி யானையை தோட்டம் காட்டுக்குள் அனுப்பி வைக்க இருக்கிறார்கள் அதனால் இன்னும் சில நாட்களில் இந்த கும்கி யானை மூலம் அந்த மக்னா யானையை பிடிக்க இருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.