Published on 10/06/2022 | Edited on 10/06/2022

வைகாசி விசாகத்தையொட்டி, மதுரை- பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வைகாசி விசாக பெருவிழாவையொட்டி, மதுரை- பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று காலை 10.50 AM மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத சிறப்பு ரயில் பிற்பகல் 01.25 PM மணிக்கு பழனியைச் சென்றடையும்.
அதேபோல், பிற்பகல் 02.45 PM மணிக்கு பழனியில் இருந்து புறப்படும் முன்பதிவில்லாத விரைவு சிறப்பு ரயில் மாலை 05.10 PM மணிக்கு மதுரையைச் சென்றடையும். இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.