பேரையூரில் விசாரணைக்குச் சென்று உயிரிழந்த இளைஞர் ரமேஷின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இளைஞர் ரமேஷின் சகோதரர் சந்தோஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கு இன்று (08/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
மனுதாரர்: செப்டம்பர் 16- ஆம் தேதி போலீஸ் விசாரணைக்குச் சென்ற இளைஞர் ரமேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
நீதிபதி: சட்டவிரோத காவல் மரணம் என புகாரளித்த நிலையில் உடற்கூராய்வை ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை?
நீதிபதி: தடயவியல் அல்லாமல் சாதாரண மருத்துவர்களைக் கொண்டு உடற்கூராய்வு செய்ய வேண்டிய அவசியம் என்ன?
நீதிபதி: உசிலம்பட்டி அரசு மருத்துவமனையிலேயே உடற்கூறாய்வு செய்ய வேண்டிய அவசரமும், அவசியமும் என்ன?
மனுதாரர்: காவல்துறையினர் சட்டவிரோதமாக அழைத்துச் சென்று தாக்கியதில் தனது சகோதரர் உயிரிழந்துள்ளார்.
நீதிபதி: பேரையூர் இளைஞர் ரமேஷின் உடலை மறுஉடற்கூராய்வு செய்யவும், அதனை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை அக்டோபர் 13- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.