‘மெட்ராஸ்’ உயர்நீதிமன்றம் என்ற பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இதுகுறித்து மத்திய அரசுக்கு பல கோரிக்கை மனுக்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து, தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்றுவது என்று முடிவு செய்த மத்திய அரசு, சென்னை உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் குழுவின் கருத்தைக் கேட்டது.
இதுகுறித்து உயர்நீதிமன்ற அனைத்து நீதிபதிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, சென்னை உயர்நீதிமன்றம் அதிகார எல்லைக்குள் தான் புதுச்சேரி மாநிலமும் உள்ளது. அதனால், தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று பெயர் மாற்ற முடியாது. பம்பாய் உயர்நீதிமன்றம், கல்கத்தா உயர்நீதிமன்றம் என்ற பெயர்கள் தொடர்ந்து நீடிப்பது போல, மெட்ராஸ் உயர்நீதிமன்றம் பெயரும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் முடிவு செய்துள்ளனர்.