Skip to main content

காதல் ஒருவருடன் கல்யாணம் ஒருவருடன்;காதலெனும் பெயரில் பணம்பறித்த பெண்ணுக்கு சிறை!!

Published on 18/11/2018 | Edited on 18/11/2018

நெல்லை மாவட்டம் தளபதி சமுத்திரத்தை சேர்ந்த  உமா என்ற பெண் காதலிப்பதாக கூறி இளைஞரிடம் நகை பணம் பறித்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

நாகர்கோவிலைச் சேர்ந்த ராஜாமங்கலத்தைச் சேர்ந்தவர் பொறியாளராக இருந்த சோதிரி ராஜா. இவருக்கும் நாகர்கோவிலில் உள்ள கார் விற்பனை நிலையம் ஒன்றில் வேலை பார்த்து வந்த உமா என்ற பெண்ணுக்கும் பணியிடத்தில் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.

arrest

 

இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்றாலும் காதல் மயக்கத்தில் இருவரும் ஜோடியாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். உமா தனது குடும்ப வறுமை நிலையை சோதிரி ராஜாவிடம் சொல்ல ஒரு கட்டத்தில் உமாவைத்தான் தான் மணக்கப் போகிறோம் என்ற மனநிலையில் இருந்த  சோதிரி ராஜா உமாவின் வங்கிக் கணக்கில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை தன் சம்பளத்தில் இருந்து கொடுத்துள்ளார். 

 

அதேபோல் சிலமாதங்களுக்கு முன்னர் அவருக்கு நான்கு சவரனில்  தங்க வளையல்களையும் பரிசாக அளித்துள்ளார். இப்படி சென்று கொண்டிருந்த இவர்களது உறவில் திடீரென முறிவு ஏற்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு மொபைல் எண்ணை மாற்றிவிட்ட உமா  இவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். உமாவின்  அழகில் மயங்கிய சோதிரி ராஜா  அதன்பின்  அவரை  தொடர்பு கொண்டபோது ஜாதி பிரச்சனைகள் இருப்பதால் வீட்டில் நம் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மறுத்து விட்டனர் எனக் கூறியுள்ளார். 

 

arrest

 

இதுவரை உமாவின் வங்கி கணக்கில் 10 லட்சம் ரூபாய் வரை போட்டிருந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன் சோதரி ராஜாவுடன் பேசுவதை முற்றிலும் நிறுத்தியுள்ளார் உமா.

 

பின்னர் சில நாட்கள் கழித்து நெல்லையில் ஒரு ஹோட்டலில் நடந்த திருமண வரவேற்பு விழாவிற்கு சென்றபோது சோதிரி ராஜா தனது காதலி வேறு ஒருவருடன் ஜோடியாக இருப்பதைக் கண்டு மிகவும் வருந்தி கண்கலங்கினார். அதன்பின் உமாவிடம் சென்று தான் கொடுத்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும், தங்க வளையல்களையும் திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.

 

arrest

 

அதற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள் கண்டிப்பாக கொடுத்து விடுகிறேன் என  உமா உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதன்பிறகு செல்போன் நம்பரை மாற்றிய உமா சோதிரி ராஜாவின் அழைப்புகளை எடுக்க மறுத்துள்ளார். மேலும் உமா பரமசிவம் என்ற வேறொரு நபரை காதலித்து திருமணம் செய்துகொண்டது சோதிரி ராஜாவுக்கு தெரியவந்தது.

 

இதுபற்றி சோதரி ராஜா  காதல் கணவர் பரமசிவம் என்பவரிடம்  நேரில் சென்று நியாயம் கேட்டுள்ளனர். ஆனால் உமாவின் கணவன் பரமசிவனோ  சோதிரி ராஜாவை மிரட்டியதாக கூறப்படுகிறது.

 

arrest

 

இதையடுத்து வள்ளியூர் காவல் நிலையத்தில் தனது வங்கிக் கணக்கு, நகைக்கடை ரசீது என ஆதாரங்களுடன் முறையாக புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் இந்த வழக்கை விசாரித்த போலீசார்  காதல் என்ற ஒற்றை வார்த்தையில் ஏமாற்றிய உமாவை கைது செய்தனர். அதேபோல் கொலை  மிரட்டல் விட்ட உமாவின் கணவர் பரமசிவத்தையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

   

சார்ந்த செய்திகள்

Next Story

'ஜாபர் சாதிக் கைது'- போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிரடி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
 'Jaber Sadiq Arrested'-Narcotics Unit in action

டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.

தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாகவும், அவர் போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாகச் செயல்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய நிலையில், அந்த நபர் திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க. சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார்.  

தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில் அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு இந்த கைது தொடர்பாக இன்று பிற்பகல் விளக்கமளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.