உச்சநீதிமன்றம் விதித்த கெடு நாளையுடன் நிறைவடையும் நிலையில் தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
லோக் ஆயுக்தா அமைப்பை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்கள் ஜூலை 10ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று நடைபெறும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டத்தில், லோக் ஆயுக்தா சட்டவரைவு தாக்கல் செய்யப்பட்டு, எதிர்க்கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்படும் எனத் தெரிகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற பேரவைக் கூட்டத்தின் போது, லோக் ஆயுக்தா தொடர்பாக கேள்வி எழுப்பிய திமுக உறுப்பினர் சேகர் பாபுவுக்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நடப்பு கூட்டத் தொடரிலேயே லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.