Skip to main content

உள்ளாட்சி தேர்தலுக்கு எதிராக திருமாவளவன் தொடர்ந்த மனு தள்ளுபடி!

Published on 10/12/2019 | Edited on 10/12/2019


உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழகத்தில்  மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களில ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தலாம் என தீர்ப்பு அளித்துள்ளது.இதையடுத்து தேர்தல் ஆணையம் பழைய அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு, மறுவரையறை செய்யப்படாத 9 மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு டிசம்பர் 27,30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்ற புதிய அறிவிப்பாணையை வெளியிட்டது.

 

high court




இதையடுத்து உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட நகராட்சி உயர்பதவிகளுக்கு முறைமுக தேர்தல் நடத்துவதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மறைமுத தேர்தலுக்காக தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டம், விரோதமானதல்ல என்று கூறி திருமாவளவனின் மனுவை தள்ளுபடி செய்தது. 

 

சார்ந்த செய்திகள்