Published on 17/07/2021 | Edited on 17/07/2021

இந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இந்த வருடம் டிசம்பர் இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும். வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி முடிக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் சீர்திருத்தம் மற்றும் மகளிருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றில் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இந்தக் குற்றச்சாட்டுகளைக் களைந்து இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும். அதேபோல் வாக்காளர் பட்டியல் சரி செய்யப்படும் பணியும் விரைவுபடுத்தப்படும்'' என்றார்.