தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. முதல்கட்ட தேர்தல் வரும் 27- ஆம் தேதியும், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் டிசம்பர் 30- ஆம் தேதியும் நடக்கிறது. இந்நிலையில் 27 மாவட்டங்களில் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் இடங்களில் இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. பிரச்சாரம் நிறைவுக்கு பின் வாக்காளர்கள் அல்லாத நபர்கள் உள்ளாட்சி இடங்களில் இருந்து வெளியேற உத்தரவு. வெளியேறாதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல் டிசம்பர் 30- ஆம் தேதி இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் வரும் 28- ஆம் தேதியுடன் பரப்புரை நிறைவடைகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுக்காக 60,918 போலீசாரும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்காக 61,004 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதேபோல் முன்னாள் ராணுவத்தினரும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.