Skip to main content

சேலம் சரகத்தில் ஒரே நாளில் 14 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை!

Published on 03/01/2019 | Edited on 03/01/2019

புத்தாண்டு தினத்தையொட்டி, சேலம் சரகத்தில் டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் 14.25 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.

 

t
கோப்புப் படம்


சேலம் மாவட்டத்தில் 204 டாஸ்மாக் மதுபானக் கடைகள் உள்ளன. ஆங்கில புத்தாண்டு பிறப்பையொட்டி, டிசம்பர் 31, 2018-ம் தேதியன்று ஒரே நாளில் 5.95 கோடி ரூபாய்க்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஆரம்பநிலை மது பிரியர்கள் பெரும்பாலும் பீர் வகை மதுபானங்களையே வாங்கிச் சென்றனர். 


நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 188 டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் 3.50 கோடி ரூபாய்க்கும், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் மூலம் 1.80 கோடிக்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 115 டாஸ்மாக் கடைகள் மூலம் 3 கோடி ரூபாய்க்கும் மது விற்பனை நடந்துள்ளது.
 


புத்தாண்டு பிறப்பையொட்டி டிசம்பர் 31-ம் தேதி ஒரே நாளில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் சரகத்தில் 14.25 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது.



இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒவ்வொரு ஆண்டும் புது வருடப் பிறப்புக்கு முதல் நாளன்று மது விற்பனை வழக்கத்தைவிட அதிகமாகத்தான் இருக்கும். சேலம் மாவட்டத்தில் டிசம்பர் 31-ம் தேதியன்று மட்டும் 9,204 பெட்டிகள் பிராந்தி, ரம், விஸ்கி உள்ளிட்ட மது வகைகளும், 6,401 பெட்டிகள் பீர் வகைகளும் என மொத்தம் 5.95 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆனது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம்,'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்