'குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான்' என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.
விலைவாசி உயர்வைக் கண்டித்து தேமுதிக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரன் பேசுகையில்,
இன்னைக்கு கேப்டன் (விஜயகாந்த்) நல்லா இருந்திருந்தால் இந்த கட்சியை ஒன்னும் செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். நாங்கள் எல்லாருமே அவரின் வளர்ப்புதான். அவர் இந்த மக்களுக்கு செஞ்சது ஆயிரம், லட்சம் இருக்கு. 40 வருஷம் இந்த மக்களுக்காக செய்திருக்கிறார். இன்னைக்கு அவர் உடல்நிலை சரியில்லாததால் ஓய்வு எடுக்கிறார். மீண்டும் நான் சொல்கிறேன் குகைக்குள் இருந்தாலும் சிங்கம் சிங்கம் தான். இன்று சேலத்திலிருந்து வரும் பொழுது கள்ளக்குறிச்சி தாண்டிதான் வந்தேன். ஸ்ரீமதி என்ற மாணவி இறந்த அந்த கல்லூரியை பார்த்துவிட்டு தான் வந்தேன். அது கொலையா தற்கொலையா என இன்னும் யாருமே சரியாக சொல்லவில்லை. புலன் விசாரணை படத்தில் டயலாக் ஒன்று இருக்கும். 'கொலையா தற்கொலையா' அதே போன்று தான் திரும்பவும் கேள்வியை வைக்கிறோம். என்னதான் கோர்ட் சொன்னாலும் ஸ்ரீமதியின் பெற்றோர்கள் எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்து அதற்குரிய நியாயத்தை கேட்கிறார்கள். திமுக அரசு ஆட்சியில் இருக்கிறது. அவங்க ஆட்சியில் இல்லாத பொழுது அனிதா என்ற ஒரு மாணவியின் மரணத்தை அரசியல் செய்தார்கள். ஆனால் ஸ்ரீமதி விஷயத்தில் ஏன் இவ்வளவு இன்வால்வ்மெண்ட் கொடுக்க மாட்டேங்கிறார்கள். நிச்சயம் திமுக அரசு ஸ்ரீமதி என்ற மாணவி எப்படி இறந்தார்கள் என்று கேள்வியை எழுப்பி பெற்றோர்களுக்கு சரியான பதிலை கொடுக்க வேண்டும் என தேமுதிக சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்றார்.