Skip to main content

சிங்க குட்டிக்கு பெயர் சூட்டிய எடப்பாடி பழனிசாமி

Published on 13/10/2017 | Edited on 13/10/2017
சிங்க குட்டிக்கு பெயர் சூட்டிய எடப்பாடி பழனிசாமி

காஞ்சீபுரம் மாவட்டம் வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள ராகவ் என்ற ஆண் சிங்கத்திற்கும், கவிதா என்ற பெண் சிங்கத்திற்கும் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி பெண் சிங்ககுட்டி பிறந்தது. இந்த பெண் சிங்ககுட்டிக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடந்த 27.9.2011 அன்று ‘ஜான்சி’ என்று பெயர் சூட்டினார். இந்த ஜான்சி என்ற பெண் சிங்கம் சிவா என்ற ஆண் சிங்கத்துடன் இணை சேர்ந்து கடந்த 6.2.2017-ம் ஆண்டு ஒரு ஆண் சிங்ககுட்டியை ஈன்றது. இதனை பூங்கா ஊழியர்கள் பராமரித்து வந்தனர்.

புதிதாக பிறந்த இந்த சிங்ககுட்டிக்கு ‘விஷ்ணு’ என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பெயர் சூட்டினார். இதனைத்தொடர்ந்து முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பூங்காவில் உள்ள பேட்டரி வேனில் சென்று பல்வேறு விலங்குகளின் இருப்பிடங்களை சுற்றிப்பார்த்து பூங்காவை ஆய்வு செய்தார்.

சார்ந்த செய்திகள்