Skip to main content

சோழ மன்னர்கள் வழிபட்ட சிவலிங்கம் கண்டெடுப்பு?

Published on 05/02/2021 | Edited on 05/02/2021

 

Lingam buried in the soil .. Chola period lingam ..?


பஞ்சபூத திருத்தலங்களில் நீர் தளமாக விளங்குவது திருவானைக் கோவில். இக்கோவில், கோச்செங்கட் சோழ மன்னனால் கட்டப்பட்ட முதல் மாடக்கோவில். இங்குள்ள சிவனை வழிபட, நாள்தோறும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். 


தற்போது, கும்பாபிஷேகத்திற்குப் பிறகு கோவிலில் பல்வேறு புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு, பிப்ரவரி மாதத்தில் கோவில் வளாகத்தில் உள்ள நெற்களஞ்சியம் அருகில் தங்கக் காசு புதையல் கண்டெடுக்கப்பட்டது. அதேபோல் தற்போது மூன்றாம் பிரகாரத்தில், குபேர லிங்கேஸ்வரர் சன்னதி அருகில் உள்ள காம்பவுண்ட் சுவறை இடித்தபோது, மண்ணில் புதையுண்டு இருந்த மூன்றடி உயரம் கொண்ட சிவலிங்கமும், இரண்டரை அடி உயரம் கொண்ட சிவலிங்கமும் கண்டெடுக்கப்பட்டது. 


தற்போது, இந்த இரண்டு சிவலிங்கமும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதனை, ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த லிங்கம் சோழ மன்னர்கள் வழிபட்ட லிங்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்