சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில்,
தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடத்தில் வெற்றிபெறும். கருத்து கணிப்புகள் பற்றி நான் வேறு எதுவும் கருத்துகணிப்பு கூறுவதற்கு இல்லை.

என்னுடைய யூகம் மத்தியில் மாநிலகட்சிகளும் காங்கிரசும் சேர்ந்து ஆட்சியமைக்கும். 2004 ல் கூட சொன்ன கருத்து கணிப்பு மாதிரி முடிவுகள் வரவில்லை. ஒரு சில நேரங்களில் கருத்துகணிப்புகள் சொல்வதை போலவே முடிவுகள் அமைந்திருக்கிறது. இன்னும் இரண்டு நாள்தானே இடையில் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழகத்தில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பயிர் நடவு செய்த விவசாய நிலத்தில் குழாய் அமைப்பது பெரும் கண்டனத்திற்கு உரியது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்த உடனே இதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள் இது எவ்வளவு வஞ்சகமான சதி. ஆனால் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உடந்தையாக இருக்கிறது எனக்கூறினார்.