Skip to main content

''நீட்டுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடரும்''-தமிழக அரசு

Published on 03/02/2022 | Edited on 03/02/2022

 

'' Legal fight against neet will continue '' - Government of Tamil Nadu

 

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. தற்போது தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.

 

தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, இதுதொடர்பாக விரைவாகத் தீர்வுகாண வேண்டும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அந்த மசோதாவும் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.  மசோதா திருப்பி அனுப்பப்படுவதற்கான காரணங்களைப் பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக அரசுக்கு விளக்கி உள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது. நீட் விலக்கு மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு மாறாக உள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

 

இந்நிலையில் ஆளுநரின் முடிவுக்கு பிறகு தமிழக அரசு இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'கல்வி உரிமையை நீட் தேர்வு பறிக்கிறது. தமிழக மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நீட் தேர்வு தடையாக உள்ளது. நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழக மாணவர்களின் நலனை காக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு ரத்து தொடர்பாகச் சட்டப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என தமிழக முதல்வர் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்