Skip to main content

மேட்டூர் அணைக்கு குறைந்தது நீர்வரத்து!

Published on 16/08/2020 | Edited on 16/08/2020
At least water supply to Mettur Dam!

 

கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வந்ததால் காவிரியில்  நீர்திறப்பு என்பது அதிகரித்து வந்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து  அதிகரித்து வந்த நிலையில் 75 அடியில் இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் தற்பொழுது 99 அடியை எட்டியுள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு தற்போது குறைந்துள்ளது. தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 13,905 கனஅடியாக குறைந்துள்ளது. தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.01 அடியாகவும்,   நீர் இருப்பு  63.56 டி.எம்.சி ஆகவும் உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசன தேவைக்காக 13,500 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்