மொழி, கலாச்சார ஆய்வுக்காக
தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம், பண்பாடு, ஆன்மீகம் மீது அதிக பற்றுக் கொண்ட ஆஸ்திரேலிய பெண் கருவூல அதிகாரி கீரமங்கலம் அருகில் உள்ள அலஞ்சிரங்காடு குருகுலம் பள்ளியில் ஆய்வு செய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
ஆஸ்திரேலிய பெண் அதிகாரி :
ஆஸ்திரேலிய கருவூலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆனந்தமார்க்கா(55). அவர் வடுமுறை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் பல நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்து வந்துள்ளார். அதே போல இந்தியாவில் அதிகமாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், வேலூர் மற்றும் பல இடங்களில் உள்ள கோயில்களுக்கும் பல முறை வந்துள்ளவருக்கு தமிழ்நாட்டு மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு மீது அதிக பற்று ஏற்பட்டுள்ளது. அதனால் தான் பெயரைக் கூட ஆனந்தமார்க்கா என்று மாற்றி வைத்துக் கொண்டவர் தமிழ் மொழியை கற்க நினைத்து இணைய தளம் மூலம் தமிழ் எழுத்துகளை எழுத கற்றுக் கொண்டவர் பேசவும் கற்றுக்கொண்டார்.
பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்..
இந்த ஆண்டும் தமிழகத்தில் 2 மாதங்கள் தங்கி கலாச்சாரம் பற்றி அறிந்து கொள்ள வந்துள்ள அனந்த மார்க்கா புதுக்கோட்டை மாவட்டம் அலஞ்சிரங்காடு கிராமத்தில் உள்ள குருகுலம் பள்ளிக்கு வந்துள்ளார். அவருக்கு வழிகாட்டியாக குருகுலம் சிவநேசன் உள்ளார்.
பள்ளியில் வகுப்பு நடந்து கொண்டிருந்த போது அங்கு சென்று பள்ளி மாணவர்களின் உடையில் உள்ள தமிழ் எண்களை பார்த்து வியந்தார். மேலும் மாணவர்களிடம் தமிழ் பற்றியும், தமிழக தலைவர்கள் பற்றி கேட்டு அறிந்து கொண்டவர். நூன் உங்களுக்கு தமிழில் எழுதட்டுமா என்று கூறி தமிழில் அ, ஆ, இ என்று கரும்பலகையில் எழுதி வாசித்து காட்டினார். இதனைப் பார்த்த மாணவர்கள் வியந்தனர்.
5 வயதுக்கு மேல தான் பள்ளி:
அனந்தமார்க்கா கூறும் போது.. எனக்கு தமிழ் மீது அதிக பற்று உள்ளது. அதனால் தான் அடிக்கடி தமிழக கோயில்களுக்கு வந்து போறேன். மொழியும் கற்றுக் கொள்ள தொடங்கியுள்ளேன். இங்குள்ள பெண்கள் சேலை உடுத்துவதைப் பார்த்து அதே போல நானும் உடுத்த ஆசைப்பட்டு 10 புடவை வாங்கி இணைய தளத்தில் உள்ள வீடியோக்களைப் பார்த்து சேலை உடுத்த கற்றுக் கொண்டேன். அதே போல எழுதவும், பேசவும் இணைய தளத்தின் மூலமே கற்று வருகிறேன். இப்போது நேரடியாக மக்களை சந்தித்து அவர்களின் கலாச்சாரம், பன்பாடு பற்றி அறிந்து வருகிறேன். தமிழக மாணவர்கள் நல்ல அறிவோடு இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் 5 வயதுக்கு கீழே பள்ளியில் சேர்க்க முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் 3 வயதுக்குள்ளேயே சேர்த்துவிடுகிறார்கள். அங்கே வாரத்தில் 3 நாட்கள் 10 மணி நேரம் மட்டுமே வகுப்புகள் இருக்கும். ஆனால் இங்கே வாரத்தில் 5, 6 நாட்கள் முழுநேர வகுப்பு நடக்கிறது. கிரேடு முறையில் மேல்படிப்புக்கு வாய்ப்பு கிடைக்கும் ஆஸ்திரேலியாவில் என்றார். மேலும் இன்னும் பல கிராமங்களுக்கு சென்று மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் உணவு முறைகளையும் கலாச்சாரத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்திய உணவு நன்றாக உள்ளது என்றார்.
- இரா.பகத்சிங்
தமிழகம் வந்துள்ள ஆஸ்திரேலிய பெண்!