வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேல் நிம்மியமபட்டு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி கூலித்தொழிலாளி. இவருக்கு தாமரை என்ற மனைவியும் , சங்கீதா, மணி, சிலம்பரசன் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் சங்கீதா திருமணமாகி சென்னையில் வசித்து வருவதாகவும், மணி,சிலம்பரசன் ஆகிய இருவரும் லாரி ஓட்டுனர்களாக உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மகன்கள் இருவரும் வெளி மாநிலத்துக்கு லோடு ஏற்றி சென்றுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் கோவிந்தசாமிக்கு வாணியம்பாடி அடுத்த செக்குமேடு பேருந்து நிலையம் அருகில் 65 சென்ட் சொந்த நிலம் இருப்பதாகவும், அதனை கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி ஜெயசங்கர் என்பவருக்கு விற்பனை செய்து 2.5 லட்சம் அளித்து மீதி தவணையை 3 மாதத்துக்குள் செலுத்துவதாக ஜெயசங்கர் ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையில் ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதி முடிந்தும் நான்கு ஆண்டுகளாக மீதி தவணையை செலுத்தாமல் ஜெய்சங்கர் ஏமாற்றி வந்ததால் கோவிந்தசாமி குரும்பட்டி பகுதியை சேர்ந்த கமலநாதன் என்பவருக்கு இடத்தை விற்பனை செய்துள்ளார். இதனால் எம்.ஜி.ஜெயசங்கருக்கும் , கோவிந்தசாமிக்குமிடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வந்த நிலையில் இருதரப்பிலும் ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு அதன் பேரில் நேற்று காவல்துறையினர் முன்னிலையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி வரும் 20ந்தேதி ஜெயசங்கருக்கு பணத்தை திருப்பி கொடுப்பதாக முடிவு செய்துள்ள நிலையில் நேற்று காவல்துறையின் பேச்சு வார்த்தையை மீறி எம்.ஜி ஜெயசங்கர் 20 க்கும் மேற்பட்ட அதிமுகவை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் அடியாட்களுடன் வந்து கோவிந்தசாமியை அவரது வீட்டுக்கு அருகே உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து கட்ட பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அங்கு கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார் இதனால் மணமுடைந்த கோவிந்தசாமி வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த பெட்ரோலை உடல் மீது ஊற்றி கொண்டு தீ வைத்துக்கொண்டுள்ளார்.
கட்டபஞ்சாயத்தில் இருந்து வீட்டிற்கு சென்ற கணவர் நீண்ட நேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த அவருடைய மனைவி தாமரை, வீட்டிற்கு வந்து பார்த்த போது கணவர் தீவைத்து கொண்டுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்து கத்தி கூச்சல்போட்டு அக்கம் பக்கதினரை அழைத்து தீயை அணைத்து அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில் 14ந்தேதி காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி மற்றும் ஆலாங்காயம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நிலத்தகராறில் காவல்துறை பேச்சுவார்த்தையை மீறி கட்டபஞ்சாயத்து செய்து மிரட்டியதால் கூலித்தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்யது கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.