காவலர் வில்சன் கொலை செய்யப்பட்டது நாடும் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலையில் சம்பந்தப்பட்ட பயங்கரவாதிகள் அப்துல் சமீம் மற்றும் தவ்பீக் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் நீதிமன்றக்காவலில் வைக்கப்பட்டனர். பின்னர் கடந்த 20ஆம் தேதி அவர்கள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.
இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கொலைக்கு பயன்படுத்திய கத்தி திருவனந்தபுரம் பஸ்நிலையத்திலும், துப்பாக்கி எர்ணாகுளம் பஸ்நிலையத்திலும் மறைத்து வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் மீட்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் அவர்கள் முகச்சவரம் மற்றும் முடிவெட்டிய சலூன் மற்றும் இருவரின் வீடுகள் உட்பட பல இடங்களில் போலீஸ் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நீதிமன்றம் அனுமதித்த 10 நாட்கள் முடிவடைந்து விட்டதையடுத்து அப்துல்சமீம், தவ்பீக் இருவரையும் நாகா்கோவில் நீதின்றத்தில் அனுமதித்தனா். தொடா்ந்து நீதிபதி இருவரிடம் விசாரணை மேற்கொண்டு விட்டு, அவா்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதைதொடா்ந்து போலீஸார் பலத்த பாதுகாப்புடன் அப்துல் சமீம், தவ்பீக் இருவரையும் அழைத்து சென்றனா். இந்தநிலையில் மேலும் பல்வேறு தகவல்கள் திரட்டப்பட வேண்டியிருப்பதால் மீண்டும் அவா்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி நீதிமன்றத்தில் போலீஸ் மனுத்தாக்கல் செய்ய இருக்கிறது.