Skip to main content

 பெண் போலிஸ் - எஸ்.ஐ. ரகசிய உறவு! சிக்கவைத்த வீடியோ!

Published on 16/12/2018 | Edited on 16/12/2018
l

 

திருச்சி மாவட்ட எஸ்.பியிடம் அழுகையும் கண்ணீருமாய் வந்த அந்த பெண் அழுதுகொண்டே கம்மியான குரலில் சார்.. என்னுடைய ஸ்டேஷனில் வேலை பார்க்கும் எஸ்.ஐ. பாலசுப்பிரமணியன் இரவு பணியின் போது என்னை கெடுக்க முயற்சி பண்ணி மானபங்கபடுத்தி விட்டார் சார். எனக்கு பயங்கர மன உளைச்சலா இருக்கு சார் என்று அழுது புகார் கொடுத்திருக்கிறார். 

 

போலிஸ் எஸ்.ஐ. மீது  பெண் போலீஸ் இப்படி அதிரடியாக புகார் கொடுப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த எஸ்.பி உடனே அந்த பாலியல் தொல்லை  செய்த அந்த எஸ்.ஐ.யை சஸ்பெண்ட செய்து உத்தரவிட்டார். 

 

பெண் போலிசை மானபங்க முயற்சி செய்தற்காக சஸ்பெண்ட செய்யப்பட்டதை அறிந்த எஸ்.ஐ. அதிர்ச்சியடைந்து, என்னங்க இது புதுகதையாக இருக்கு. நான் எங்கே பாலியல் தொந்தரவு   பண்ணினேன். நாங்கள் இருவரும் எப்போதும் இப்படி தானே இருப்போம். என் மீது மட்டும் ஏன் நடவடிக்கை எடுத்தால் இரண்டு பேர் மீதும் எடுங்கள் என்று புகார் கொடுக்க, பிரச்சனை தற்போது யூடர்ன் எடுக்க ஆரம்பித்தது. 

இப்போது மாவட்ட எஸ்.பி ஜீயபுரம் டி.எஸ்.பி. ராதகிருஷ்ணன் தலைமையில் மறுவிசாரணைக்கு உத்தரவிட அவருடைய விசாரணையில் பிரச்சனையே வேறு மாதிரியாக தெரியவும் அதிர்ச்சியடைந்துள்ளார். 

 

டி.எஸ்.பி. விசாரணையில்.. 

எனக்கும் மட்டும் தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்குது என ஆதங்கப்பட்டார். இதையடுத்து, சுதாரித்து கொண்ட மாவட்ட எஸ்.பி காவல்நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய டி.எஸ்.பி ராதாகிருஷ்ணனுக்கு உத்தரவிட்டார். சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சம்பவத்தன்று பாலசுப்பிரமணி இரவு 10 மணிக்கு ஸ்டேஷனுக்கு வந்து உள்ளார். அப்போது சசிகலா போலீஸ் பணியில் இருந்தார். சில நொடிகளில் அந்த சசிகலா அருகில் செல்லும் அந்த எஸ்.ஐ, அவருக்கு ஒரு முறை முத்தம் கொடுத்துவிட்டு, அவரிடம் பேச்சு கொடுக்கிறார். 

 

சில நொடிகளில் காமத்தின் உச்சத்திற்கே செல்லும் அவர், அந்த பெண் போலீசின் முகத்தை பிடித்து இழுத்து ‘லிப் டூ லிப்’ அடிக்கிறார். 2 நிமிடம் 50 நொடிகள் ஓடும் வீடியோவில் அந்த பெண் போலீஸ் கொஞ்சமும் எதிர்ப்பு தெரிவிக்காமல் முழு மனதோடு அவருக்கு ஒத்துழைப்பு கொடுப்பது தெரியவந்தது. 

 

முன்னதாக இருவரின் காம சேட்டையின் போது, காவல் நிலைய வளாகத்திற்குள் பைக்கில் உளவுத்துறை போலீஸ்காரர் ஒருவர் வருகிறார். அதில், அடிக்கும் லைட் வெளிச்சத்தை பார்த்து இருவரும் ஒதுங்கி இருப்பதும், எஸ்.ஐ வெளியே சென்றதும் உளவுத்துறை போலீஸ்காரரிடம் அந்த பெண் போலீஸ் பொய் புகார் அளித்திருப்பது தெரியவந்துள்ளது.

 

தனக்கு தானே குழிபறித்த சசிகலா

இருவரின் காம சேட்டை விவரத்தை உளவு பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து வெளியே சென்றவுடன், சசிகலா கணிப்பொறி பிரிவில் வேலை செய்வதால் வீடியோவில் பதிவான காட்சிகளை தனியாக அவர் பதிவு செய்து கொண்டார். உண்மை வெளிச்சத்துக்கு வந்ததும் எஸ்.ஐ தினமும் எனக்கு கொடுக்கும் பாலியல் தொந்தரவை ஆதாரத்துடன் நிரூபிக்கத்தான், அந்த உளவுத்துறை போலீஸ்காரரை நான் வரவழைத்தேன் என்று அந்த பெண் போலீஸ் கூறியதாக கூறப்படுகிறது. இருப்பினும், வீடியோவில் பதிவான காட்சிகளை பார்க்கும்போது இருவரின் சம்மதத்துடன் காமசேட்டை அரங்கேறியதாக அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. 

அந்த எஸ்.ஐக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகளும், கணிப்பொறியில் வேலை பார்க்கும் சசிகலாவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

கலைஞருக்கு இரங்கல் தெரிவித்த பெண் காவலர் இடமாற்றம்!

Published on 20/08/2018 | Edited on 20/08/2018
lady police


மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கலைஞருக்கு இரங்கல் தெரிவித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட திருச்சி பெண் காவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாநகரக் காவல் நுண்ணறிவு பிரிவில் தலைமைக் காவலராக பணியாற்றுபவர் செல்வராணி. இவர் திமுக தலைவர் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் வீடியோவில் கவிதை பாடி, அதை சமூகவலைதளமான வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவின் இறுதியில், இது என் உணர்ச்சியின் வெளிப்பாடு, கலைஞர் ஒரு எழுத்தாளர், மாபெரும் கலைஞர், பத்திரிகையாளர், கவிதையாளர். நானும் ஒரு கவிஞர் என்ற முறையில் இது என் உணர்ச்சியின் வெளிப்பாடு, ஒரு தமிழச்சியின் வெளிப்பாடு தயவு செய்து இதை அரசியலாக்கிவிட வேண்டாம். அழுவதற்கு எனக்கும் உரிமை உண்டு, காவல்துறை என்பதால் கண்ணீர் வடிக்க எனக்கு உரிமை இல்லையா? எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், செல்வராணியை திருச்சி மாநகர காவல்துறையில் இருந்து மத்திய மண்டல காவல்துறைக்கு பணியிட மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவிட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், திமுக தலைவர் கலைஞரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ வெளியிட்டதன் காரணமாகவே இவர் மாற்றப்பட்டார் என காவல்துறையினர் மத்தியில் பரவலாக கூறப்படுகிறது.

Next Story

போலீஸ் திருடினால் குற்றமில்லையா? சீறும் பிரபல வழக்கறிஞர் புகழேந்தி!

Published on 26/07/2018 | Edited on 26/07/2018
lady-police


சென்னை எழும்பூரிலுள்ள சூப்பர் மார்க்கெட்டில் திருடிய பெண் போலீஸ் நந்தினியை அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ள சென்னை மாநகர காவல்துறை. ஆனால், திருடிய குற்றத்துக்கு பெண் போலீஸ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கொந்தளித்துபோய் கேள்வி எழுப்பியுள்ளார் பிரபல வழக்கறிஞர் புகழேந்தி.

இதுகுறித்து, நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், “பெண் போலீஸ் திருடியதும்… அதனை கண்டித்த சூப்பர் மார்க்கெட் கடையின் உரிமையாளர்களை பெண் போலீஸின் கணவன் தாக்கியதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை என்றால் காவல்துறை இதை ஒரு வழக்காகவே பதிவு செய்திருக்காது. வீடியோ ஆதாரத்துடன் சிக்கியதால்தான் பெண் போலீஸின் கணவன் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை. ஆனால், பெண் போலீஸ் நந்தினி திருடிய குற்றத்துக்கு என்ன தண்டனை? இதுவே, நீங்களோ நானோ என சாதாரண மனிதர்கள் திருடியிருந்தால் காவல்துறை சும்மா விட்டுவிடுமா?

சட்டம் ஒழுங்கை காப்பாற்ற வேண்டிய பொறுப்பை அரசாங்கம் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறது. காவல்துறை செய்கிற குற்றங்களையும் தவறுகளையும் சட்டரீதியாக தண்டித்தால் தங்களது துறைக்கே அது பாதகமாக அமைந்துவிடும் என்று காவல்துறை அதிகாரிகள் நினைக்கிறார்கள். அதனுடைய கட்டுப்பாடு குலைந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தங்களுக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் காவல்துறையில் உள்ளவர்கள் மறைக்கும் வேலையில்தான் ஈடுபடுகிறார்கள்.
 

advocate


சட்டத்தின் முன் அனைவரும் சமம். சாதாரண பொதுமக்களுக்கு என்ன சட்டமோ அதுதான் காவல்துறையினருக்கும் என்பதை காவல்துறையினர் தங்களது மனதளவில்கூட நினைப்பதில்லை. சட்டத்தையும் சட்ட ஒழுங்கையும் காப்பாற்ற வேண்டியவர்கள் நாங்கள். ஆனால், நாங்கள் சட்டத்தை மீறலாம். மக்கள்தான் மீறக்கூடாது என்பது காவல்துறையின் எண்ணம்.

தமிழ்நாடு முழுக்க நகை திருடன்களிடமிருந்து மீட்கப்படும் நகைகளை கொஞ்சமாக கணக்கு காட்டிவிட்டு மீதி நகைகளை இவர்களே பங்குபோட்டுக்கொள்கிறார்கள்; அதாவது திருடன்களிடமிருந்து போலீஸே திருடிக்கொள்கிறது. ஆனால், போலீஸ் திருடினால் திருட்டு அல்ல. அதாவது, அரசின் அங்கீகரிக்கப்பட்ட குற்றவாளிகள். பொதுமக்கள் செய்யக்கூடிய குற்றத்தை இவர்கள் செய்தால் குற்றமல்ல. நாம், குற்றம் செய்தால் காவல்துறை தட்டிக்கேட்கலாம். அவர்கள், குற்றம் செய்தால் பொதுமக்கள் நாம் தட்டிக்கேட்க முடியாது.

இப்போது, திருடிய பெண் போலீஸ் நந்தினி சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற, துறை ரீதியான நடவடிக்கை என்பது வெறும் கண் துடைப்புதான். கடந்த, கடந்த ஜூன் மாதம்-20 ந்தேதி புழல் மத்தியில் சிறையில் ரவுடி பாஸ்கர் முரளி சக கைதிகளால் குத்தி கொலை செய்யப்பட்டது தொடர்பாக பணியில் கவனக்குறைவாக இருந்த உதவி ஜெயிலர் பழனிவேல், முதன்மை தலைமை காவலர் நாகராஜன் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள். ஆனால், சஸ்பெண்ட் செய்யப்பட்ட செய்திதான் பரபரப்பாக பத்திரிகைகளிலும் ஊடகங்களில் வெளியானது. ஆனால், சத்தமில்லாமல் பதினைந்தே நாளில் மீண்டும் அவர்கள் பணியில் சேர்ந்துவிட்டார்கள்.

இதேபோல், ஒரு மாதத்திலோ இரண்டு மாதத்திலோ நந்தினியும் பணியில் சேர்ந்துவிடுவார். பிறகெப்படி குற்றம் செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற பயம் போலீஸுக்கு வரும்? துறை ரீதியான நடவடிக்கை என்பதே 80 சதவீதம் ஏமாற்று வேலைதான். ஆக, பொதுமக்களும் போலீஸும் ஒன்றுதான். குற்றங்களை காவல்துறையினர் செய்தாலும் சட்டப்படி குற்றம்தான் என்று நடவடிக்கை எடுக்காதவரை மக்களுக்கு எதிரான காவல்துறையினரின் குற்றங்கள் பெருகிக்கொண்டேதான் இருக்கும்” என்கிறார் அதிரடியாக.

இதுகுறித்து, பெண் போலீஸ் நந்தினியின் மீது நடவடிக்கை எடுக்காத எழும்பூர் இன்ஸ்பெக்டர் சேட்டுவிடம் நாம் கேட்டபோது, “சூப்பர் மார்க்கெட் உரிமையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய பெண் போலீஸ் நந்தினியின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நந்தினி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றவரிடம், “திருடிய குற்றத்துக்கு நீங்கள் ஏன் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று கேட்டபோது, பதில் சொல்லாமல் சிரித்தபடி ஃபோனை துண்டித்தார் இன்ஸ்பெக்டர்.

குற்றம் செய்யும் காவல்துறையினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்களா?