குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு தொடங்குவதால் இரண்டாவது நாளாக இன்று குளிக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
--LINKS CODE------
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த இரு நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மெயின் அருவி பழைய குற்றால அருவி ஐந்தருவி ஆகிய அருவிகளில் ஒன்றரை மாதங்களுக்கு பிறகு அதிக அளவில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.
நேற்றும் இன்றும் வெள்ளப்பெருக்கு தொடர்வதால் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் பாதுகாப்பு கருதி மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாயினர்.
குற்றாலத்தில் சீசன் துவங்கி ஒன்றரை மாதங்களுக்கு பிறகு தற்போதுதான் அருவியில் தண்ணீர் விளங்கியதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது இதனால் குற்றாலத்தில் உள்ள வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தென்காசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு நாட்களாக பெய்துவரும் மிதமான மழையால் பொதுமக்களும் விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.