Skip to main content

கும்பகோணத்தில் அதிகரித்துவரும் பிளாஸ்டிக் பை; வணிகர்களுக்கு உணர்த்திய அதிகாரிகள்

Published on 02/09/2019 | Edited on 02/09/2019

 

கும்பகோணம் நகரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை படுஜோராக நடப்பதாகவும், உபயோகப்படுத்தவும் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் சில கடைகளில் ஆய்வு செய்ய வந்தனர்.  நகராட்சி அதிகாரிகள், அவர்களை தடுத்து நிறுத்தி குடைச்சல் கொடுத்த வணிகர்களை சாதுர்யமாக குப்பைக்கிடங்கு இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்று இது நியாயமா என கேள்வி கேட்டு நோகடித்து பலரையும் நெகிழவைத்துள்ளது.

 

k

 

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதையும் மீறி தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பந்தநல்லூர்,  பகுதியில் பல்வேறு வணிகர்கள் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தியே வருகின்றனர். நகர் நல அலுவலர்கள் கடந்த எட்டு மாதங்களாக அவ்வப்போது வணிக நிறுவனங்கள் உணவு விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். அதோடு பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அபராதமும் முதல் தடவை எச்சரிக்கை நோட்டீசும் வழங்கி வருகின்றனர்.

 

 இந்தநிலையில் கும்பகோணம் மாநகராட்சி நகர்நல அலுவலர் பிரேமலதா தலைமையில் அதிகாரிகள் பழைய மீன் மார்க்கெட் அருகே உள்ள வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி ஆய்வுக்கு சென்றனர். அப்போது வணிக நிறுவனத்தினர் நகராட்சி அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளோ கும்பகோணத்தில் உள்ள வணிகர் சங்க நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக வணிகர் சங்க நிர்வாகிகள் ஆய்வு நடந்த இடத்துக்கு வந்து நகராட்சி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில்," மத்திய மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு கும்பகோணம் வணிகர்கள் எப்போதும் ஒத்துழைப்பு தருகிறோம் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய ஒரு சில இடங்களில் இப்படி பயன்படுத்தப்படுகிறது. இனிமேல் அதையும் நாங்கள் பயன்படுத்த மாட்டோம்." என வனிகர்கள் அதிகாரிகளிடம் கூறினர்.

 

அதிகாரிகளோ, "இப்போது பிளாஸ்டிக் பையை பயன்படுத்தியதற்கு அபராதம் விதிப்பதாக கூறினர்.  இதனால் ஆத்திரமடைந்த வணிகர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்ததோடு,  அபராதம் விதித்தால் நாங்கள் கடையடைப்பு நடத்துவோம்." என கர்ஜித்தனர்.

 

இதையடுத்து நகர் நல அலுவலர்ககளும், பணியாளர்களும் ஆய்வை தடுக்க வந்த கும்பகோணம் அனைத்து வணிகர் சங்க கூட்டமைப்பு தலைவர் மகேந்திரன் செயலாளர் சத்யநாராயணன் உள்ளிட்ட நிர்வாகிகள் 20க்கும் மேற்பட்டோரை அழைத்துக்கொண்டு கும்பகோணம் நகராட்சியில் குப்பை கிடங்கு உள்ள கரிகுளத்திற்கு அழைத்துச்சென்று. அங்கு சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை காட்டினர். அப்போது அங்கு குவிந்திருந்த பிளாஸ்டிக் பைகள் அடங்கிய குப்பைகளை பார்த்து வணிகர் சங்கத்தின் நிர்வாகிகள் மளைத்துபோனார்கள். அப்போது நகர்நல அலுவலர் பிரேமலதா," கும்பகோணம் நகரில் நாளொன்றுக்கு 70 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 20 சதவீதம் பிளாஸ்டிக் பைகள் தான் இந்தப்பைகள்.  எப்படி வருகிறது வணிகர்களால் தானே வருகிறது. இதை உங்களால் மட்டுமே தடுக்க முடியும் என்றார்.

 

அதை பார்த்து நெளிந்த வனிகர்கள்," இனிமேல் கும்பகோணம் நகரில் பிளாஸ்டிக் விற்பனை இருக்காது. நாங்கள் முழு ஒத்துழைப்பு தருகிறோம்." என்று உறுதியளித்தனர்.

சார்ந்த செய்திகள்