Skip to main content

சொத்து தராததால் தந்தையின் தலையில் கருங்கல்லை போட்டு கொலை செய்த மகன்; அதிர்ந்த கதிர்குளம் மக்கள்

Published on 20/10/2018 | Edited on 20/10/2018
kudi

 

வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுக்கா பரதராமி அடுத்த கதிர்குளம் கிராமத்தில் வசிப்பவர் கோபால். அவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் இருந்துவருகிறது. இதில் அவர் விவசாயம் செய்து வருகிறார். பரம்பரை சொத்தான அதிலிருந்து தனக்கு பங்கு வேண்டுமென கோபால் மகள் பாலு தனது தந்தையிடம் பங்கு கேட்டு வந்துள்ளார். நீ ஊதாரி உனக்கு பங்கு தரமாட்டேன் போடா என விரட்டி வந்துள்ளார்.

 

இது தொடர்பாக தந்தை - மகன் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஊரார் பல பஞ்சாயத்து செய்தும் இந்த பிரச்சனை தீராமல் இருந்து வந்துள்ளது. கடந்த வாரத்தில் மீண்டும் அப்பா - மகன் இருவருக்கும் சண்டை வந்துள்ளது. போதையில் அப்பாவை எச்சரித்துள்ளான் மகன். இதனை அவர் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லையாம். 

 

இந்நிலையில், கடந்த அக்டோபர் 19ந்தேதி காலை கதிர்குளம் விவசாய மக்கள் தங்கள் நிலத்துக்கு சென்றபோது, ஒரு இடத்தில் கோபால் தலை மேல் கருங்கல் போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியாகினர். இதுப்பற்றி உடனடியாக பரதராமி போலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு விசாரணை நடத்தினர்.

 

அதில் அப்பா - மகன் இருவருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது என்றும், சமீபத்தில் நடந்த ஒரு சண்டையில் உன்னை கொல்லாமல் விடமாட்டேன் என தன் தந்தையை பார்த்து மகன் கோபத்தில் சொன்னதையும் பலர் தகவல் கூறினர். இதனை தொடர்ந்து கோபால் மகன் பாலுவை போலிஸார் தேடத்துவங்கினார். அவன் தலைமறைவாக இருந்துவந்தான்.

 

இந்நிலையில் இரவு பாலுவை கைது செய்த போலிஸார் அவனிடம் நடத்தி விசாரணையில் சொத்துக்காக தான் தான் தன் தந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் எப்படி கொலை செய்தாய் என தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர். 

சொத்துக்காக அப்பனை கொலை செய்த மகனை நினைத்து அதிர்ச்சியில் உள்ளனர் அப்பகுதி மக்கள். 

 

சார்ந்த செய்திகள்