இரும்புக்கு தேவையான தாது பொருட்களை குறைந்த விலையில் வாங்கி தருவதாக, ஆன்லைன் மோசடி செய்த கொல்கத்தா வாலிபர் கைது!
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் சுத்துக்கேணி கிராமத்திலுள்ள பசுபதி இன்ஜினியரிங் கம்பெனியின் உரிமையாளர் பிரசாந்த் பன்சால். இவரிடம் ஷ்யாம் மைத்ரா (எ) போலோநாத் பிஸ்வால் என்ற கொல்கத்தா வாலிபர், தான் ஒரு இந்திய இரும்பு கம்பெனியில் மேலாளராக பணியாற்றி வருவதாகவும், இணையதளத்தின் மூலம், அவரது இரும்பு கம்பெனிக்கு தேவையான தாது பொருட்கள் 200டன் சப்ளே செய்வதாகவும் கூறி, முதலில் ரூ.58,32,200 ஆகிய தொகைகளை அவரது வங்கி கணக்கில் போடும் படி கூறினார் என்றும், அதன்படி பிரசாந்த் பன்சால் ஆன்லைன் மூலம், அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தியும் இரும்பு சம்மந்தமான தாது பொருட்கள் வரவில்லை எனக்கூறி புதுச்சேரி சிபிசிஐடி போலீசாரிடம் கொடுத்தார்.
அப்புகாரின் பேரில் புதுச்சேரி காவல்துறை இயக்குனர் சிவகாமி சுந்தரி நந்தா உத்தரவு படி, சிபிசிஐடி போலீசார் கொல்கத்தா சென்று குற்றவாளியான ஷ்யாம் மைத்ரா (44 வயது) என்ற வாலிபரை கைது செய்து, விமானம் மூலம் புதுச்சேரிக்கு அழைத்து வந்தனர்.
மேலும் அவரிடம் ரூ.45 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறிய சிபிசிஐடி காவல்துறை டி.ஐ.ஜி சந்திரன், சிறப்பாக செயல்பட்டு குற்றவாளி களை கொல்கத்தாவில் கைது செய்த போலீசார் அனைவரையும் பாராட்டினார்.
Published on 01/08/2018 | Edited on 01/08/2018