Skip to main content

உழவர் கடன் அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு: ஆட்சியர் ராமன் தகவல்!

Published on 12/02/2020 | Edited on 12/02/2020

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, பிரதம மந்திரி விவசாயி கவுரவ நிதி திட்டத்தின் கீழ், உழவர் கடன் அட்டை (கிசான் கிரெடிட் கார்டு) வழங்கப்பட்டு வருகிறது. தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு, விண்ணப்பித்த 15 நாள்களுக்குள் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது.


கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் விவசாய அல்லது சேமிப்புத் திட்ட கணக்கு உள்ள வங்கிக்கிளையை அணுகி உழவர் கடன் அட்டையைப் பெற்று மானிய சலுகையுடன் வங்கிக்கடன் பெறலாம்.

kisan credit card salem district collector raman invite as farmers


ஏற்கனவே உழவர் கடன் அட்டை பெற்றுள்ள விவசாயிகள், தங்களின் வங்கிக்கிளையை அணுகி கடன் தொகையின் வரம்பை உயர்த்தவும் விண்ணப்பிக்கலாம். அத்துடன், செயல்படாத உழவர் கடன் அட்டை உள்ளோர், வங்கிக்கிளையை அணுகி, கடன் அட்டையை செயல்படுத்தவும், புதிய கடன் வரம்பிற்கு அனுமதியும் பெறலாம். 


உழவர் கடன் அட்டை இல்லாத விவசாயிகள், தங்களது நில ஆவணங்கள் மற்றும் அடங்கல் ஆவணத்துடன் புதிய கடன் அட்டை பெறுவதற்கு வங்கிக் கிளையை அணுக வேண்டும். உழவர் கடன் அட்டைதாரர்கள் கால்நடை மற்றும் மீன் பிடிப்பிற்கான பராமரிப்பு செலவுகளுக்கான கடன் தொகையை, வரம்பில் சேர்ப்பதற்காக வங்கிக்கிளையை அணுகலாம். கடன் அட்டை பெறுவதற்கு இத்திட்டத்தின் இணையதளம் மூலம் குறுஞ்செய்தி அனுப்பப்படும். 


இத்திட்டத்தின் விவசாயப் பயனாளிகள், ஒரு பக்கப் படிவத்தில் தங்களது நிலம், பயிர் விவரங்கள் மற்றும் வேறு எந்த வங்கிக் கிளையிலும் கடன் அட்டை பெறவில்லை என்பதற்கான உறுதிமொழி பிரமாணம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்விண்ணப்பத்தை பொது சேவை மையங்கள் மூலமும் சமர்ப்பிக்கலாம். 


சேலம் மாவட்ட விவசாயிகள் அனைவரும், இத்திட்டத்தில் பயன்பெற வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்