உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அதிமுக எம்.எல்.ஏ., அன்பழகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளார். மாநிலத்தில் இரட்டை ஆட்சி நடைபெறும் சூழலை உருவாக்கி இருக்கிறார். அதிகாரிகள் யார் சொல்வதை கேட்பது என்பதில் குழம்பி தவிக்கிறார்கள்.
சட்டமன்றம் நடைபெறும் நிலையில், அதிகாரிகள் சட்டமன்றத்திற்கு வராமல் ஆளுநர் மாளிகைக்கு ஆய்வுக்கு செல்கின்றனர். இது ஆளுநர் கிரண்பேடி வேண்டுமென்றே செய்யும் குளறுபடியாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து இனியாவது கிரண்பேடி தருந்துவார் என்று எதிர்பார்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் இல்லை என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஆளும் கட்சியின் கொறடா அனந்தராமனும் வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.