திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை ஒன்றிய திராவிட கழகம் சார்பில், ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ் தலைமையில் திராவிட மாடல் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டு திராவிட மாடல் குறித்து பேசும் போது, "பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மக்கள் படிக்கக் கூடாது என தடை விதித்தனர். ஆனால் கல்விச் சாலைகள் பல அமைத்து படிக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு சத்தான உணவு கொடுத்து தற்போது காலை சிற்றுண்டி வரை வழங்கி அவர்களை படிப்பில் முன்னேற வைப்பது தான் திராவிட மாடல்.தமிழ்நாட்டில் பட்டப்படிப்பு படிக்கும் கல்லூரி மாணவிகள் படிப்பிலும், பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிக் கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் பெண்கள் முன்னேற்றம் காண்கிறார்கள் என்பது தான் திராவிட மாடல். அதிமுக என்ற கட்சி தற்போது அடமான திமுக என்று ஆகி விட்டது. பிஜேபி இடம் அடமானமாக உள்ள அதிமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. ஈரோட்டில் திமுக பெறும் மகத்தான வெற்றி, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கும்" என்று பேசினார்.
இந்த கூட்டத்தில் திராவிட கழக நிர்வாகிகள், மற்றும் திமுக தோழமைக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.