நிர்மலா தேவி விவகாரத்தில் ஆராய்ச்சி மாணவர் கருப்ப சாமிக்கு ஜாமீன் வழங்க சிபிசிஐடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
கல்லூரி மாணவிகளை பாலியல் ரீதியாக ஆசைவார்தை கூறி பேசிய ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த வழக்கில் பேராசிரியை நிர்மலா மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைது செய்ய பட்டு சிறையில் உள்ளனர்.
இதில் மூன்றாவது குற்றவாளி ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஜாமீன் வழங்க கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி சுவாமிநாதன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. இதில், சிபிசிஐடி தரப்பு கடும் எதிர்ப்பு முதல் குற்றவாளியான நிர்மலா தேவியுடன் நேரடி மற்றும் போன் உரையாடல் உள்ளது. இவருக்கு ஜாமின் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்க பட்டது. இதை ஏற்று கொண்ட நீதிபதி சிபிசிஐடி காவல்துறை ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்திவைத்தார்.