கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன்-3 நேற்றிலிருந்து ஆரம்பமானது. இதில் 15 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த முறை பிக் பாஸ் வீட்டிற்குள் நிறைய புதிய விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டுள்ளது.இந்த சீசனில் நடிகை கஸ்தூரி போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார் என்று அனைவரும் சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர். இந்த நிலையில் நேற்று போட்டியாளர்களின் பட்டியலில் கஸ்தூரி இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர்.
அட, ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா? ?
— Kasturi Shankar (@KasthuriShankar) June 24, 2019
எப்படியோ, "பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே ! #BiggBossTamil3
Wishing all the participants the very best of luck. I know most of them, will try to watch every once in a while for their sake ! https://t.co/pqPmhhq80R

இருப்பினும் அவரை பிக் பாஸ் வீட்டிற்குள் ஓவியமாக வரைந்துள்ள புகைப்படம் ஒன்றை நெட்டிசனால் கண்டு பிடித்துள்ளனர். இந்த நிலையில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஓவியமாவே வரைஞ்சுட்டாங்களா? எப்படியோ, "பிக் பாஸ் வீட்டுல கஸ்தூரி" ன்னு வரிஞ்சு வரிஞ்சு எழுதினவங்க வாக்கு பலிச்சிருச்சே! என்று ட்விட் செய்துள்ளார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இடையில் கஸ்தூரி பங்கு பெறுவார் என்று கூறி வருகின்றனர்.