முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் சென்னையில் செய்தியலாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,
இந்த அரசாங்கம் முழுக்க முழுக்க கால்புணர்ச்சி காரணத்தால் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாமல் ஜோடித்த வழக்கை உருவாக்கியுள்ளது. அந்த வழக்கில் உள்ள சம்பவங்கள் எல்லாம் 2008 ஆம் ஆண்டு நடந்ததாக அவர்கள் சொல்கிறார்கள். அதற்காக 2017 ஆம் ஆண்டிலே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். ஒன்பது வருடம் கழித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். எனக்கு இருபது தடவை எனக்கு சம்மன் கொடுத்தாச்சு ஒவ்வொரு சம்மனுக்கு நான் 10 மணி நேரம் அவங்களுக்கு முன் ஆஜராகி இருக்கிறேன். ஏன் சிபிஐ விருந்தாளியாகக்கூட 11 நாள் இருந்திருக்கிறேன். இதன்பிறகும் இதுவரை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வில்லையே.
முழுக்க முழுக்க யாரையோ திருப்திப்படுத்துவதற்காக அரசியல் காரணத்திற்காக தொலைக்காட்சியில் ஒரு விஷுவல்ஸ் வருவதற்காக செய்கிறார்களே தவிர இது ஒன்றும் உண்மையான இன்வெஸ்டிகேஷன், உண்மையான சிபிஐ நடவடிக்கை மாதிரி எனக்கு தெரியவில்லை இதை சட்டப்படி எதிர்கொள்வோம் என்றார்.