இன்று டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நவம்பர் 1 முதல் 23ஆம் தேதி வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2600 கன அடி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே காவிரி நேர் ஒழுங்காற்று குழு கொடுத்த பரிந்துரையை ஏற்று காவிரி மேலாண்மை அணிந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசு சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் சார்பில் வினாடிக்கு 13,000 கன அடி நீர் நவ.1 தேதியில் இருந்து 23ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கர்நாடகா தரப்பில் கலந்து கொண்ட அதிகாரிகளோ, தற்போதைய சூழ்நிலையில் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் நீர்வரத்து அணைகளுக்கு குறைந்து வருகிறது. கடந்த 15 நாட்களாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டோம். தொடர்ந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் எங்களுடைய அணைகளில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. எனவே கடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழுக் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட பரிந்துரையான நவம்பர் 1ஆம் தேதி முதல் 2,600 கன அடி நீர் திறக்கும் பரிந்துரையை ஆணையம் ஏற்கக்கூடாது என வலியுறுத்தினர். ஆனால் இரண்டு தரப்பு அதிகாரிகளுடைய கருத்துக்களையும் கேட்ட காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று தமிழகத்திற்கு நீர் திறக்க உத்தரவிட்டார்.