கர்நாடக மாநிலம் பெங்களூரு பரபரப்பன அக்ரஹாரா சிறைவிதிகளை சசிகலா மீறியது உண்மைதான் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு சிறையில் இருந்து விதியை மீறி சசிகலா வெளியே சென்றது குறித்து காவல்துறை அதிகாரி ரூபா புகார் அளித்திருந்தார். இந்த புகார்களை விசாரிக்க வினய்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. ஐ.பி.எஸ் அதிகாரி ரூபாவின் புகார்களை விசாரித்த வினய்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் சசிகலா விதியை மீறி சிறையில் இருந்து வெளியே சென்று வந்தது உண்மையே என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் சசிகலா சிறையில் அடைக்கப்பட்டதும், 5 செல்களில் இருந்த கைதிகளை வெளியேற்றி அறை ஒதுக்கப்பட்டது. அதேபோல் சிறையில் சசிகலாவுக்காக சமையல் செய்யப்பட்டதும், விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையிலான குழு அறிக்கையால் சசிகலாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சிறையில் இன்று நடத்தப்பட்ட சோதனையில் மொபைல் சிம் கார்டு, 37 கத்திகள், கஞ்சா புகைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.