நம்மை யார் கேட்க முடியும். நாம் தான் இங்கே ராஜா என்ற கர்வத்திலிருக்கிறார்கள் டோல் கேட் ஊழியர்கள்.
குமரி மாவட்ட மணவாளக்குறிச்சியின் ஆறாம்விளைப் பகுதியின் சேக் சுலைமான் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த தனது உறவினர்கள் 10 பேர்களுடன் தூத்துக்குடி திருமண நிகழ்ச்சிக்காக வாகனத்தில் வந்தனர். நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரி டோல் கேட்டில், தற்போதைய பாஸ்டேக் நடைமுறைப்படி, பாஸ்டேக் கவுண்டர்கள் 8ம், சாதாரண கவுண்டர் 2 என்று மாறுதல் செய்யப்பட்டதால் சாதாரண கவுண்டரில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சுலைமானின் வாகனம் வெகு நேரம் காத்து நின்றதால் நிகழ்ச்சிச்சிக்குச் செல்ல தாமதமேற்பட்டுள்ளது. ஒரு வழியாகக் கவுண்டர் பக்கம் வந்த சமயம் டோல்கேட் நெட் ஒர்க் பழுது காரணமாக கட்டண ரசீது கிடைக்கவில்லை. காலதாமதம் நேரத்தைக் கருதி காரில் வந்த சர்புதீன் கட்டணத்தைத் டோல்கேட் ஊழியர்களிடம் கொடுத்து நிலைமையைச் சொன்னவர், ரசீதை நீங்களே வைத்தக் கொள்ளுங்கள் என்று சொல்ல, ஊழியர்கள் அவர்களிடம் வாக்குவாதம் செய்யப் பின் தள்ளுமுள்ளு ஆகியது. உடனே டோல் கேட் ஊழியர்கள் இரும்புக் கம்பி, சேர் ஆகியவைகளைக் கொண்டு வேனில் வந்தவர்களையும், தடுக்க முயன்ற பெண்களையும் கூட முரட்டுத் தனமாகத் தாக்கியுள்ளனர்.
இதில் பெண்கள் உட்பட 10 பேர்கள் காயமடைந்துள்ளனர். அது சமயம், இதர வாகனத்தில் வந்த மற்றப் பயணிகள் அவர்களை மீட்டனர். இதில் சுலைமான், சல்மாபீபீ, சமீமா உள்ளிட்ட வயதான பெண்களுக்கும் காயம் ஏற்பட்டது. கடுமையாகக் காயம்பட்ட 5 பேர்கள் நாங்குனேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு வந்த இன்ஸ்பெக்டர் சஜீவ் டோல்கேட் ஊழியர்கள் 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினார். இது குறித்து இரண்டு தரப்புகளும் புகார்கள் கொடுத்தனர்.
இந்த அராஜகத்தைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டோல்கேட்டில் நாம் வைத்தது தான். சட்டம் என்ற கெத்திலிருக்கிறார்கள் ஊழியர்கள்.