Skip to main content

கன்னியாகுமரி மீனவர்கள் இந்தோனேசியா கடல் எல்லையில் கைது!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

Kanyakumari fishermen arrested off Indonesian waters

 

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்டு மீனவர்களை இந்தோனேசிய கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

 

கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டு மீனவர்கள் உரிய சான்றிதழ்களுடன், கடந்த பிப்ரவரி மாதம் 28- ஆம் தேதி அன்று அந்தமான் மீன்பிடி துறைமுகத்துக்கு மீன்பிடி விசைப்படகில் சென்றனர். பின்னர், அங்குள்ள ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, இந்தோனேசியா கடல் எல்லைக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 

 

இதையடுத்து, எட்டு மீனவர்களையும் இந்தோனேசியா கடற்படையினர் சிறைப்பிடித்து கைது செய்தனர். மேலும், மீனவர்களை அழைத்துச் சென்று, அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராமேஸ்வரம் வரும் பிரதமர்; தமிழக மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு?

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
TN fishermen released from Sri Lankan prisons when Modi comes to Rameswaram

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நேற்று (19.01.2024) முதல் ஜனவரி 31 ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதனையொட்டி நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி சென்னை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் ‘கேலோ இந்தியா விளையாட்டு’ போட்டியை நேற்று மாலை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சி முடிவடைந்ததும் இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர், இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யவுள்ளார். இதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம் செல்லவுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவினையொட்டி பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் புனித நீராடி அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலில் வழிபாடு செய்ய உள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாட்களிலும் பாதுகாப்பு கருதி பக்தர்கள், போக்குவரத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதையொட்டி, இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 40 பேர் விடுதலை செய்யப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

பிரதமர் அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க யாழ்ப்பாணம் வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை இலங்கை அரசு விடுதலை செய்ய முடிவு எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

கொட்டைப் பாக்கு கடத்தல்;ஒருவர் கைது

Published on 07/11/2023 | Edited on 07/11/2023

 

thoothukudi incident; import export

 

தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்த கண்டெய்னர்கள் பெட்டியைப் பறிமுதல் செய்து மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் சோதனை நடத்தினர். அதில் 'பஞ்சு கந்தல்' என்ற பெயரில் மோசடியாக ஆவணங்கள் தயாரித்து கப்பல் மூலமாக இந்தோனேசியாவிலிருந்து கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்துள்ளது.

 

இந்த சம்பவத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஷிப்பிங் நிறுவன உரிமையாளர் ரவி பகதூர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் ஜகார்த் துறைமுகம் வழியாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு கண்டெய்னர் பெட்டிகள் வந்து இறங்கியது. அப்போது நடத்தப்பட்ட சோதனையில் கொட்டைப் பாக்கு கடத்தப்பட்டது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 65 டன் கொட்டைப் பாக்குகளின் மதிப்பு 4 கோடி ரூபாய் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தலுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அது குறித்தும் மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.