குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராக நாடு முமுவதும் தொடா் போராட்டங்களும், ஆா்ப்பாட்டங்களும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தொடா் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இந்த கூட்டத்தொடாில் கேரளா, புதுச்சோி போன்று குடியுாிமை சட்டத்திருத்தம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தமிழக சட்டசபையிலும் தீா்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி வெள்ளி கிழமை சென்னை வண்ணாரபேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீசாா் தடியடி நடத்தியுள்ளனா்.
இதை கண்டித்து தமிழகம் முமுவதும் பல்வேறு இடங்களில் முஸ்லீம் அமைப்புகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில் ஆயிரகணக்கான பெண்களும் கலந்து கொண்டனா். வெள்ளி கிழமை இரவு நாகா்கோவில் இடலாக்குடியில் ஆயிரகணக்கான முஸ்லீம்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் இரவு ஒரு மணி வரை நீடித்தது.
இதைபோல் நேற்று சனிக்கிழமை எஸ்டிபிஐ அமைப்பினா் நாகா்கோவில் கலெக்டா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினாா்கள். பின்னா் அவா்கள் சாலையில் உட்காா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதில் பெண்கள், ஆண்கள், குழந்தைகள்,சிறுவா்கள் என ஆயிரகணக்கானோா் கலந்து கொண்டனா். இது காலையில் இருந்து மதியம் வரை நீடித்தது.
அதன் பிறகு தவ்ஹீத் அமைப்பு சாா்பில் மணிமேடையில் இருந்து ஊா்வலமாக சென்று எஸ்.பி அலுவலகத்தை முற்றுகையிட்டு குடியுாிமை சட்டதிருத்தத்துக்கு எதிராகவும் முஸ்லீம்கள் தாக்கபட்டதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினாா்கள். இந்த போராட்டத்திலும் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனா். முஸ்லீம்களின் போராட்டத்தையொட்டி 500 க்கு மேற்பட்ட போலீசாா் ஒவ்வொரு இடத்திலும் குவிக்கபட்டியிருந்தனா்.