
இந்தி மொழிக்கு எதிரான எதிர்ப்புகளை தற்போது தமிழக திரைத்துறை பிரபலங்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். இவர்களின் நூதனப் பிரச்சாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, இந்திக்கு எதிராக டீ-சர்ட் புரட்சியை உருவாக்கி வருகின்றனர்.
பாக்கியராஜின் மகன் சாந்தனு, இவரது மனைவி கீர்த்தி உள்ளிடோர், இந்தி தெரியாது போடா , நான் தமிழ்ப் பேசும் இந்தியன் என்கிற வாசகங்கள் பொறிக்கப்பட்ட டீ-சர்ட்டுகள் அணிந்து போஸ் கொடுத்து வருவதுடன் அதே டீ-சர்ட்டுகளை அணிந்து வலம் வரவும் செய்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் இவ்வாறு டீ சர்ட் அணிந்து வருகிறார்கள்.
இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "ஒரு சிறிய தீப்பொறி காட்டுத் தீயாகி இருக்கிறது. இந்தி திணிப்பு என்பதை எதிர்க்கும் சட்டைகளை வெளியிட்டபோது யாரும் எதிர்பாராத அளவு இது இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தலைமுறையும் மொழி உணர்வில் சளைத்ததல்ல" என்று தெரிவித்துள்ளார்.