சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தி.மு.க எம்.பி கனிமொழி, பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிக்க சினிமாவில் இடம்பெறும் காட்சிகளும் காரணம் என்று தெரிவித்தார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை குஷ்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு சினிமாவையும் டாஸ்மாக்கையும் மட்டும் குற்றம்சாட்டாதீர்கள். சமுதாயத்தில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் சினிமாதான் காரணம் என்று சொல்வதை ஏற்க முடியாது என்று கனிமொழிக்கு பதில் அளித்தார். பின்னர் குற்றங்களுக்கு சினிமாதான் காரணம் என்றால் நாம் அர்ஜூன்ரெட்டி, கபீர்சிங் போன்ற படங்களை பார்க்கிறோம் என்று கூறிய அவர், தங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிப்பவர்களை பெண்கள் துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.