


Published on 25/05/2019 | Edited on 25/05/2019
வன்னியர் சங்க மாநில தலைவராக இருந்து மறைந்த காடுவெட்டி குருவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் திண்டிவனம் அருகேயுள்ள கோனேரி குப்பம் சரஸ்வதி கல்வி குழுமம் முன்பு உள்ள குருவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அப்போது செய்தியாளர்கள் தேர்தல் முடிவுகள் பற்றி கேள்வி எழுப்பியபோது, அது பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல் இரண்டாவது முறையாக பிரதமர் பதவி ஏற்க உள்ள மோடிக்கு வாழ்த்து மட்டும் தெரிவித்துவிட்டு புறப்பட்டனர்.