Published on 29/12/2018 | Edited on 29/12/2018

கஜா புயல் பாதித்த பகுதிகளில் பொதுமக்கள் கடன் நிறுவனங்கள் மற்றும் வங்கி கடன்களை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனியார் கடன் நிறுவன விளம்பரத்தில் நடித்துள்ள நடிகை ராதிகா, அனைவரும் வாங்கிய கடன்களை உடனே கட்ட வேண்டும், அரசு எந்த கடன்களையும் தள்ளுபடி செய்யவில்லை என்று பேசியிருப்பதை கண்டித்து கீழ்வேளூர் காவல்நிலையம் முன்பு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அதோடு கீழ்வேளூர் காவல் நிலையத்தில் நடிகை ராதிகா மீது பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர்.
