19 கிராமங்களில் மரக்கன்றுகளை நட்ட
காமராஜர் பல்கலை மாணவர்கள்
மதுரை மாவட்டம் ஒத்தகடை அருகே அறும்பனூர் ஊராட்சி உள்ளது. அங்கு மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் உள்ள மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து துணைவேந்தர் அறிவுறுத்தலின் படி 19 கிராமத்திற்கு சென்று அங்கு 400 மரக்கன்றுகளை நட்டனர். பின் அந்த கிராம மக்களின் குறைகளை கேட்டு தெரிந்து கொண்டனர்.
இந்த கிராமத்தில் 40க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது . அங்கு வாழும் கிராம மக்களுக்கு தேவையான அடிபடை வசதி. மருத்துவ வசதி, பள்ளி கூடம், பஸ் வசதி, இல்லை, ரேசன் கடை கூட இல்லை. அவர்களின் எல்லா தேவைகளுக்கும் மதுரைக்கு தான் வர வேண்டிய நிலை உள்ளது. இவர்களுக்கு எந்த வித அரசு திட்டமும் போய் சேர வில்லை என்று கேட்டு தெரிந்து கொண்டோம் .என்று விரைவில் அவர்களுக்கு தேவையான அடிபடை வசதிகளை செய்து தர அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம் என்று மதுரை காமராசர் பல்கலை கழக முதல்வர் இருளப்பன் கூறினார். தமிழ்துறை சாந்தி இதில் கலந்து கொண்டார் .
- முகில்